கொரோனா நெருக்கடியில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு..! மருத்துவர்கள் வரவேற்பு

கோவை: கொரோனா நெருக்கடியில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்களுக்கு முதலமை‌ச்ச‌ர் மு.க.ஸ்டாலின் ஊக்கத் தொகை அறிவித்துள்ளார்.


கோவை: கொரோனா நெருக்கடியில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்களுக்கு முதலமை‌ச்ச‌ர் மு.க.ஸ்டாலின் ஊக்கத் தொகை அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக மே மாதத்துக்கு 2000 ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்றிலிருந்து இரவு பகல் பாராமல் மக்களை காப்பாற்றப் போராடி வரும் மருத்துவ பணியாளர்களுக்கும் பல்வேறு ஊக்கத்தொகைகள், இழப்பீடு தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா சிகிச்சைப் பணியில் நோய் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த மருத்துவர்கள் குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். இதன்படி 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது.

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், இதரப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலையில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு ரூ 30,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செவிலியர்களுக்கு 20,000ரூ ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், இதர மருத்துவ பணியாளர்களுக்கு 15,000 ரூ ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், மேற்படிப்பு மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு தலா 20,000ரூ வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...