பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பகுதியில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த காந்தி சிலை சாலைப் பணிகளின் காரணமாக அகற்றப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி வழியாக கேரள மாநிலம் மற்றும் மற்ற மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மத்திய பேருந்து நிலைய காந்தி சிலையில் இருந்து உடுமலை ரோடு வரை வரும் நான்கு வழி சாலை, ரோடு விரிவாக்க பணிகள் 5 மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் பணிகள் சுமார் 70 சதவிகிதம் நிறைவடைந்து உள்ளது. சாலை விரிவாக்கம் செய்யப்படும் முக்கிய சந்திப்பு பகுதிகளில் ரவுண்டானா மற்றும் சிறு பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பாலக்காடு ரோடு பஸ் நிலையம் அருகே மற்றும் கோவை ரோடு - நியூ ஸ்கீம் ரோடு சந்திப்பில் உள்ள காந்தி சிலை அருகே ரவுண்டானா அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

நியூ ஸ்கீம் ரோடு சந்திப்பு பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமர்ந்த நிலையில் இருந்த காந்தி சிலை நேற்று முன்தினம் ராட்சத கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு தூக்கிச் செல்லப்பட்டது. சில மணி நேரத்தில காந்தி சிலை அருகே உள்ள தாலுகா அலுவலக வளாகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. நியூ ஸ்கீம் ரோடு பகுதியில் ஒரு மாதத்திற்குள் ரவுண்டானா அமைக்கப்பட்டு, அதன் நடுவே காந்தி சிலை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.