கோவை: கோவை அண்ணா பல்கலைக்கழகத்தில் புதியதாக கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 50 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில், கொரோனா பெருந்தொற்றுப் பரவல், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மருத்துவமனைகள் முழுவதும் நிரம்பி வழிவதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், நவாவூரில் உள்ள அண்ணா பல்கலை வளாகத்தில், முதற்கட்டமாக மகளிர் விடுதியில், 100 படுக்கைகளுடன் கூடிய, கொரோனா சிகிச்சை மையம் நேற்று திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, ஏராளமான நோயாளிகள் வந்தனர். முதல்நாளான நேற்று மாலை வரை, 50 பேர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.