கோவை: கோவை வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ளது ஜுபிடர் பாலம். இந்தப் பாலத்தில் வளர்ப்பு மாடுகள் இரவில் ஏராளமாகத் தங்குகின்றன. இதனால், பாலம் நிரந்தர மாட்டுக்கொட்டகையாக மாறிவிட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ளது ஜுபிடர் பாலம். இந்தப் பாலத்தின் வழியாக சிங்கோனா முடிஸ் உட்பட பல்வேறு தேயிலைத் தோட்டங்களுக்கு ஏராளமான வாகனங்கள், மக்கள் சென்று வருகின்றனர். இந்தநிலையில், இந்தப் பாலத்தில் வளர்ப்பு மாடுகள் இரவில் ஏராளமாக வந்து தங்குகின்றன. இதனால், இந்தப் பாலம் நிரந்தர மாட்டுக்கொட்டகையாக மாறிவிட்டது. மாடுகளின் கழிவுகள் பாலம் மட்டுமின்றி அந்தப் பகுதி முழுவதும் சிதறிக் கிடக்கின்றன.

இதன் காரணமாக அந்தப் பாலத்தைக் கடந்து செல்பவர்கள் வாகனத்தில் சென்றாலும் நடந்து சென்றாலும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். மேலும், துர்நாற்றமும் வீசுகின்றது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி உள்ளார்கள். தற்போதைய நிலைமையில், கொரோனா பெருந்தொற்று நோய் அதிகரித்து வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக நகராட்சி நிர்வாகமும் சுகாதாரத் துறையும் இணைந்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.