பொள்ளாச்சி அருகே கஞ்சா விற்பனை செய்த நபர் கைது... 400 கிராம் கஞ்சா பறிமுதல்..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த நபரை விசாரித்ததில் அவர் கஞ்சா வியாபாரி என்பதை அறிந்து உடனடியாக அவரை போலீஸார் கைது செய்தனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த நபரை விசாரித்ததில் அவர் கஞ்சா வியாபாரி என்பதை அறிந்து உடனடியாக அவரை போலீஸார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(48). இவர் சமத்தூர் அருகே இன்று சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து பணியில் இருந்த கோட்டூர் உதவி ஆய்வாளர் செந்தில்வேல் பெருமாள் உள்ளிட்ட போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவரிடம் சோதனை செய்தபோது, சுமார் 400 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...