கோவை: கோவையை சேர்ந்த ஆயுதப்படைக் காவலர் தனது ஏப்ரல் மாத சம்பளத்தை கொரோனா தொற்றுத் தடுப்பு பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. கோவையிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளை மேற்கொள்ள அரசுக்கு நிவாரண நிதி அளிக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில் கோவை ஆயுதப்படையில் (2008 பேஜ்ஜை சேர்ந்தவர்) பணியாற்றும் பாபு என்ற காவலர் தனது ஏப்ரல் மாத சம்பளத் தொகையான ரூ.34,474 ஐ முதல்வர் நிவாரண நிதிக்காக வழங்கி உள்ளார்.
இந்த தொகைக்கான வரைவோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாக செல்வரத்தினத்திடம் இன்று வழங்கினார். பாபுவிடம் இருந்து கொரோனா நிதிக்கான வரைவோலையை பெற்றுக்கொண்ட மாவட்ட எஸ்.பி நாக செல்வரத்தினம் அவரை பாராட்டினார். பாபுவைப் போல கொரோனா நிவாரண நிதிக்காக மேலும் பலர் நிதி வழங்க முன்வர வேண்டும் எனவும் எஸ்.பி நாக செல்வரத்தினம் வேண்டுகோள் விடுத்தார். ஆயுதப்படை காவலர் பாபு கொரோனா தொற்றுத் தடுப்பு பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.