கோவை: உடுமலையில் 2002ம் ஆண்டு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி உள்ளிட்ட இரண்டு நிறுவனங்களால் ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளர்கள் எவரேனும் இருந்தால் புகார் அளிக்கலாம் என பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் உடுமலையில் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி, அருணாச்சலம் இன்வெஸ்ட்மெண்ட் மற்றும் பைனான்ஸ் ஆகிய நிதி நிறுவனங்கள் கடந்த 2002ம் ஆண்டு செயல்பட்டு வந்தன. அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்று குறிப்பிட்ட காலம் முடிந்த பின்பு வட்டி, அசல் தொகை இரண்டையும் தராமல் மோசடி செய்தனர்.
இது தொடர்பாக நிதி நிறுவன உரிமையாளர்கள் மீது 2002ம் ஆண்டு கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்து வழக்கு முடிக்கப்பட்டது.
மேலும் இந்த நிறுவனங்களில் பணம் முதலீடு செய்து தற்போது வரை யாரேனும் புகார் கொடுக்காமல் இருந்தால் தகுந்த ஆவணங்களுடன் வரும் 14ம் தேதிக்குள் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரை சந்தித்து புகார் அளிக்க அறிவுறுத்தப்படுகிறது.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.