கோவை குடியிருப்புக்குள் புகுந்த நல்ல பாம்பு... பாம்பை உயிருடன் பிடித்த காவலர்..!

கோவை: கோவை செல்வபுரம் குடியிருப்புக்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. பொதுமக்களின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியில் பணியில் இருந்த காவலர் பாம்பை உயிருடன் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டார்.


கோவை: கோவை செல்வபுரம் குடியிருப்புக்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. பொதுமக்களின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியில் பணியில் இருந்த காவலர் பாம்பை உயிருடன் பிடித்து காட்டுப்பகுதியில் விட்டார்.

கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் பாபு. இவர் இன்று காலை செல்வபுரம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அந்தப் பகுதியில் உள்ள சாஸ்தா நகரில் குடியிருப்பு வீடுகள் உள்ளன. அங்கு திடீரென பொதுமக்கள் பாம்பு, பாம்பு என கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு காவலர் பாபு உள்ளே சென்று பார்த்தபோது, உள்ளே நல்ல பாம்பு இருப்பது தெரிய வந்தது.

அதை லாகவமாகக் கையாண்டு அந்தப் பாம்பை உயிருடன் பிடித்தார் காவலர் பாபு. பிறகு அதைக் கொண்டு சென்று காட்டுப்பகுதிக்குள் விட்டுவிட்டு வந்தார். இந்த நிகழ்வை நேரில் பார்த்த பொதுமக்கள் காவலருக்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் இருந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...