கோவையில் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த வாலிபர்... போலீஸில் ஒப்படைத்த பொதுமக்கள்..!

கோவை: கோவையில் உள்ள ஒரு வீட்டில் 150 மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவையில் உள்ள ஒரு வீட்டில் 150 மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை ஆத்துப்பாலம் அருகில் உள்ள குறிச்சி பிரிவு என்.பி. இட்டேரி பகுதியைச் சேர்ந்த அபு என்ற தாடி அபு என்ற இளைஞர் முழுஊரடங்கைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக தனது வீட்டில் மறைத்து வைத்து மதுபானங்களை விற்பனை செய்து வந்துள்ளார். இதனை அறிந்த அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் என்.பி. இட்டேரியில் உள்ள ஜமாத்தாரிடம் புகாரளித்துள்ளனர். இதனையடுத்து ஜமாத்தாரும், பொதுமக்களும் திடீரென அபுவின் வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தியதில் 150-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை மறைத்துவைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஊர்பொதுமக்கள் அபுவைப் பிடித்து கோவை போத்தனூர் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், பொதுமக்கள் பறிமுதல் செய்த மதுபாட்டில்களைப் பெற்றுக்கொண்ட போலீஸார் அபுமீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தற்பொழுது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...