லஞ்சப் புகார் எதிரொலி... கோவை அரசு மருத்துவமனை பெண் ஒப்பந்த ஊழியர்கள் சஸ்பெண்ட்..!

கோவை: லஞ்சப் புகார் எதிரொலியாக, கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் ஒப்பந்த ஊழியர்கள் இருவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


கோவை: லஞ்சப் புகார் எதிரொலியாக, கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் ஒப்பந்த ஊழியர்கள் இருவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கோவை அரசு மருத்துவமனைக்கு, தினமும் பல ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். மருத்துவமனையில் பணிபுரியும் சில ஊழியர்கள், நோயாளிகளை வீல் சேர், ஸ்ட்ரெக்சர்களில் பிற வார்டுகளுக்கு அழைத்துச் செல்ல லஞ்சம் வாங்குவதாக, புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பிரசவ வார்டில் குழந்தை பிறப்பு, அறுவை சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளிடமும், வசூல் வேட்டை நடத்தப்படுகிறது.

இந்தநிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் பிரசவ வார்டில் பெண் ஒப்பந்த ஊழியர்கள் இருவர், பிரசவம் ஆன பெண்ணின் உறவினரிடம் லஞ்சம் பெறுவது போன்ற வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில், பெண் ஒப்பந்த ஊழியர்கள், ராணி, 46, கண்ணம்மாள், 35 ஆகிய இருவரும் லஞ்சம் பெற்றது உறுதியானது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் இருவரையும் நேற்று சஸ்பெண்ட் செய்தது. மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், 'மருத்துவமனையில் எந்த ஒரு சேவைக்கும், பொதுமக்கள் பணம் தரத்தேவையில்லை. அதையும் மீறி பணம் கேட்பவர்கள் குறித்த விவரத்தை நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம். புகார் குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.' என்றார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...