பொள்ளாச்சி: அதிகரித்துவரும் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சுப நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், பூ வியாபாரிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே, நிவாரணம் வழங்க வேண்டி அரசுக்கு பொள்ளாச்சி பூ வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக நேற்று முதல் மே 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. பொள்ளாச்சி பகுதியைப் பொறுத்தவரை இரண்டாவது நாளான இன்று அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக் கடைகளான மளிகை கடை, காய்கறி கடை உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் வெளியில் வராத நிலையில் வியாபாரம் மந்தமாக நடைபெற்றது.

அதேபோல் நடைபாதை வியாபாரிகள் என பழ வியாபாரிகள், பூ வியாபாரிகள் வியாபாரம் இல்லாமல் பாதிப்படைந்துள்ளனர். கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால் தங்களைப் போன்ற வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு கடன் சுமையில் உள்ள நிலையில், அதோடு தற்போது இரண்டு வருடங்கள் வியாபாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும், தற்போது தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்கள், சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கு அரசு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பொள்ளாச்சி நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.