குறுந்தொழில்களுக்கு என தனி அமைச்சகம்... தமிழக முதல்வருக்கு கோவை கம்ப்ரசர் மற்றும் ரயில்வே சப்ளையர்ஸ் தொழில் அமைப்புகள் கோரிக்கை

கோவை: குறுந்தொழில்களுக்கு என தனி அமைச்சகம், ஆண்டுக்கு 100 தொழிற்பேட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக முதல்வருக்கு கோவை கம்ப்ரசர் மற்றும் ரயில்வே சப்ளையர்ஸ் தொழில் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: குறுந்தொழில்களுக்கு என தனி அமைச்சகம், ஆண்டுக்கு 100 தொழிற்பேட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக முதல்வருக்கு கோவை கம்ப்ரசர் மற்றும் ரயில்வே சப்ளையர்ஸ் தொழில் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை கம்ப்ரசர் தொழிற்சாலைகள் சங்கத்தின் தலைவர் மு.ரவீந்திரன் மற்றும் ரயில்வே சப்ளையர்ஸ் சங்கத்தின் தலைவர் சுருளிவேல் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘தமிழக மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளதற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தாங்கள் அறிவித்து வரும் பல்வேறு திட்டங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் உள்ள மொத்த சிறு குறு தொழில்கள் எண்ணிக்கையில், எட்டு சதவிகிதம் தமிழகத்தில் உள்ளன. இவற்றில் 97 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். தங்கள் அரசில் ஊரக தொழில்களுக்கு என தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மாநில உற்பத்தியிலும் பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றும் நகர்ப்புற குறுந்தொழில்களுக்காக தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். இந்த அமைச்சகம் மூலமாக ஆண்டுக்கு 100 புதிய தொழிற்பேட்டைகள் நிறுவ வேண்டும். உற்பத்தியாளர்கள் சந்தைப்படுத்துவதற்கு வசதியாக உழவர் சந்தை போல ‘தொழிற்சந்தைகள்' முக்கிய நகரங்களில் நிறுவ வேண்டும். அடுத்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை கோவையில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் குறுந்தொழில் பிரிவை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் சர்வதேச அளவுக்கு தொழில்நுட்பத்தை உயர்த்திக் கொள்ளவும், உற்பத்தி அளவை பெருக்கிக் கொள்ளவும் முடியும்.'' என்று கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...