கோவை: கோவை அரசு மருத்துவமனையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர்.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அவதி அடைந்துள்ளனர்.
கோவை அரசு மருத்துவமனை முதல் நுழைவாயிலில் கடந்த சில சில தினங்களாகவே சாக்கடை நீர் வெளியேறி வருவதாக குற்றச்சாட்டுகளை எழுந்தது. எனினும், கழிவு நீரை அப்புறப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று சாக்கடை நீர் அதிக அளவு வெளியேறியதால் அங்கு நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனால் நோயாளிகள் நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மக்களின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தற்காலிகமாக நடை பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தேங்கி நிற்கும் சாக்கடை நீரால் அங்கு துர்நாற்றம் வீசுவதாகவும் கொசுக்கள் அதிகரிப்பதாகவும், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். உடனடியாக சரி செய்யும்படியும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.