கோவை: தமிழகம் முழுவதும் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. தளர்வுகளுடன் கூடிய இந்த ஊரடங்கின்போது இன்று, முகக்கவசம் சமூக இடைவெளி ஆகியவற்றைக் கடைப்பிடிக்காத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை 14 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவையான மளிகைக் கடை, காய்கறி, கடைகள் மற்றும் டீக்கடைகள் 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு முகக்கவசம் சமூக இடைவெளியைக் கண்டிப்பாகப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஓட்டல்களில் பார்சல் மட்டும் வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்தநிலையில் கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனர் மகேஷ் தலைமையில் எஸ்.ஒ.ராதாகிருஷ்ணன் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரவிந்த் ஆகியோர் கோவை ரயில் நிலையம் முன்பு உள்ள கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடைகளில் முகக் கவசம் அணியாமல் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் மற்றும் கடைகளில் அமர்ந்து உணவருந்த அனுமதித்த 8 கடைகளுக்கு ரூபாய் 6 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், கடைகள் அரசு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.