கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 25ம் தேதிக்குள் செலவு கணக்கு தாக்கல் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது

கோவை மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்ளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 137 பேர் போட்டியிட்டனர். நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சம் ரூ.30 லட்சத்து 80 ஆயிரம் வரை செலவு செய்ய தேர்தல் ஆணையம் வரம்பு நிர்ணயம் செய்திருந்தது. தேர்தல் முடிவடைந்த உடன் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தாங்கள் தேர்தலில் செலவு செய்த விபரங்களை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கணக்காகாக தாக்கல் செய்யவேண்டும்.
மேலும் வேட்பாளர்களின் செலவு கணக்கை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்த குழுவினர் வேட்பாளர்களின் செலவை கணக்கீடு செய்துள்ளனர். இந்த நிலையில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வரும் 25-ம் தேதிக்குள் தங்களது செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
“வேட்பாளர்கள் தங்களது செலவு கணக்கில் வேட்பு மனுவை தாக்கல் செய்த தினத்தில் இருந்து வாக்கு எண்ணிக்கை முடியும் வரையிலான செலவுகளை குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தல் செலவுக்கென தனி வங்கி கணக்கு துவங்கி அதன் வழியாகத்தான் அனைத்துபணப் பரிவர்த்தனைகளை செய்திருக்க வேண்டும்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2 ம் தேதியோடு முடிவடைந்து விட்டது. அதில் இருந்து 25 நாட்களுக்குள் அனைத்து வேட்பாளர்களும் தங்களது செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி வரும் 25-ம் தேதிக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்யும் படி ஒவ்வொரு வேட்பாளருக்கும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. வரும் 27-ந் தேதி செலவின பார்வையாளர் தலைமையில் வேட்பாளர்களின் செலவு கணக்குகள் அனைத்தும் தணிக்கை செய்யப்படும். வேட்பாளர்கள் யாராவது செலவு கணக்கை குறிப்பிட்ட தேதிக்குள் தாக்கல் செய்யவில்லை என்றால் அவர்கள் அடுத்து வரும் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாது,”என்று கூறினார்.