வால்பாறை: கொரோனாவைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அவசியமின்றி அனாவசியமாக சுற்றித்திரிந்தவர்களுக்கு வருவாய்த்துறை, காவல்துறையினர் இணைந்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசியத் தேவையான மருந்தகம், மளிகை, காய்கறி, பால், உணவகம், தேநீர் கடைகளுக்கு மட்டும் மதியம் 12 மணி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் வருவதற்கு அனுமதி உள்ளது. இந்தநிலையில், இன்று காலை முதல் வால்பாறை நகரில் ஏராளமான பொதுமக்கள் தேவையின்றி இருசக்கர வாகனத்தில் வால்பாறையில் வலம் வந்த வண்ணம் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து வால்பாறை வட்டாட்சியர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் விஜய் அமிர்தராஜ், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோர் தலைமையிலான குழுவினர் காந்தி சிலை வளாகத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். வாகன தணிக்கையில் தேவையின்றி வருபவர்களை எச்சரித்தும் அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்தனர். மேலும், சாலையில் அடிக்கடி நடமாடுபவர்களை அழைத்து விசாரித்து அவர்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வை தெரிவித்ததோடு தேவையின்றி வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினர்.