கோவையில் இருந்து பீகாருக்கு ரூ.4000 கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து பறிமுதல்!

கோவை: கோவையில் இருந்து பீகாருக்கு ரூ.4000 கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



கோவை: கோவையில் இருந்து பீகாருக்கு ரூ.4000 கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், கோவையில் வெளியூர்களில் இருந்து தங்கி வேலை பார்ப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் புறப்பட்டு சென்றனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நேற்று இரவு வரை பேருந்துகள் இயக்கப்பட்டன.தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகள்போட்டி போட்டு பயணிகளை ஏற்றிச் சென்ற நிலையில், சில பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

இதன் பேரில், கோவை பாரதியார் சாலையில் உள்ள பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி அருகே நேற்று இரவு 11 மணி அளவில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள்அதிக பயணிகளை ஏற்றி வந்த ஆம்னி பேருந்தை மறித்து சோதனை செய்தனர். அப்போது, அந்த பேருந்தில் 70-க்கும் மேற்பட்ட பயணிகள் கோவையிலிருந்து பீகாருக்கு அழைத்துச் செல்லப்படுவது தெரியவந்தது. அவர்களிடம் தலா ரூ. 4000 வசூலிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதை அறிந்த அதிகாரிகள் பேருந்திலிருந்து அனைத்து பயணிகளையும் இறங்கிவிட்டனர். அந்த ஆம்னி பேருந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதேபோல் கோவையில் இருந்து புறப்பட்ட பல ஆம்னி பேருந்துகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கொரோனா தொற்றை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில்,இது போன்ற பொறுப்பற்ற செயல்களால் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...