கிணத்துக்கடவில் முழு ஊரடங்கு: காரணமில்லாமல் ஊர் சுற்றுபவர்களுக்கு அபராதம்.!

கோவை: அரசு மருத்துவமனை மற்றும் மயானங்களில் கோவை மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று10ம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் மட்டும் நன்பகல் 12மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.



இந்நிலையில் கிணத்துக்கடவு பகுதியில் இன்று காலை முதல் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது.



12 மணிக்கு மேல் அனைத்து மளிகை கடைகளும் அடைக்கபட்டதால் கிணத்துக்கடவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.



மேலும் காவல் துறையினரும் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



அப்போது முழு ஊரடங்கும் மீறி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுப்பி வைத்தனர்.



ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ஆகிய பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

அதேபோல, முழு ஊரடங்கின் போது முககவசம் அணியாமல் அலட்சியமாக சுற்றித்திரிந்த நபர்களுக்கு அபராதம் விதித்து, வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.



இன்று, கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் கிணத்துக்கடவு வருவாய் ஆய்வாளர் ராம்ராஜ் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா தடுப்பு ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.



அப்போது, அவ்வழியாக இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் முக கவசம் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். மேலும் முழு ஊரடங்கை பொருட்படுத்தாமல் சாலையில் முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்து நபர்களுக்கும் அபராதம் விதித்ததோடு எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...