கோவையில் ஒரே நாளில் அனைத்து ‘ரெம்டெசிவிர்' மருந்துகளும் விற்றுத் தீர்ந்தது... போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்..!

கோவை: கோவையில் ஒரே நாளில் அனைத்து ‘ரெம்டெசிவிர்' மருந்துகளும் விற்றுத் தீர்ந்ததால், எல்லோருக்கும் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவையில் ஒரே நாளில் அனைத்து ‘ரெம்டெசிவிர்' மருந்துகளும் விற்றுத் தீர்ந்ததால், எல்லோருக்கும் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனாவால் அவதிப்படும் நோயாளிகளுக்கு, ரெம்டெசிவிர் மருந்து, குறைந்த விலையில் கிடைக்க, நேற்று முன்தினம் முதல், கோவை அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் விற்பனை தொடங்கியது. விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட, 500 ‘வயல்'களும், நேற்று முன்தினம், ஒரே நாளில் விற்றுத் தீர்ந்தன. நேற்று விடுமுறை என்பதை அறியாத பலரும், மருத்துவக் கல்லூரியில் அதிகாலை முதல், மருந்து வாங்க காத்திருந்தனர்.

இந்தநிலையில், மருந்து விநியோகம் இல்லை என, மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஊழியர்கள் சமாதானம் செய்தனர். இதையடுத்து, அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இன்று வந்து மருந்து வாங்கிக் கொள்ள அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

இதையடுத்து, பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர். கோவை அரசு மருத்துவக் கல்லுாரி டீன் நிர்மலா கூறுகையில், ‘‘ரெம்டெசிவிர், தமிழ்நாடு மருந்து விநியோகக் கழகமான, டி.என்.எம்.எஸ்.சி., மூலமே, நமக்கு வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு, 500 வயல்கள் வழங்கப்படுகின்றன. கூடுதலாக வழங்குவது குறித்து, டி.என்.எம்.எஸ்.சி.தான் முடிவெடுக்க வேண்டும். மருந்து வேண்டி வந்தவர்களுக்கு, டோக்கன் வழங்கப்பட்டது. முன்னுரிமை அடிப்படையில், மருந்து வழங்கப்படும்,'' என்றார்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...