சென்னை: கொரோனா நோய்தொற்று பரவலை எதிர்கொள்வது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொழில்துறையினர் பங்கேற்ற சிறப்பு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், ‘‘கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உற்பத்தி மற்றும் சேவை தொழில் துறையினரின் ஒத்துழைப்பு மிக அவசியம்'' என்று குறிப்பிட்டார்.

கொரோனா நோய்த்தொற்றுப் பரவலை எதிர்கொள்வது குறித்து இன்று சென்னையில் நடந்த தொழில்துறையினர் பங்கேற்ற சிறப்பு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘தற்போது நிலவி வரும் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள, ஒன்றிணைந்து செயல்பட தொழில்துறையினரின் ஆலோசனை மிகவும் முக்கியமாகும். அதற்காகவே, இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்தவே தற்பொழுது முழு ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்படும். எனவே, எதிர்வரும் நாட்களில் நோய்ப்பரவல் குறைந்தால் அதற்கேற்ப கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும். தொழில் துறையினர் தெரிவிக்கும் கருத்துகள் மிகவும் முக்கியமானது'' என்றார்.
கூட்டத்தில் கோவை சார்பில் பங்கேற்ற கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் ‘கொடிசியா' தலைவர் ரமேஷ்பாபு, ‘‘கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் இரண்டாவது அலை அனைத்து தொழில்துறையையும் கடும் நெருக்கடிக்குத் தள்ளி உள்ளது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு மாவட்ட தொழில் மையம்(DIC) மூலம் நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, வங்கி கடன் செலுத்துவதற்கு கால நீட்டிப்பு( Moratorium Extension )செய்வது, கடந்த முறை நிதி அமைச்சர் அறிவித்த சிறப்பு நிதி உதவி திட்டம்(Stimulus Package) போல் மீண்டும் ஒரு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதற்கு தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள காரணத்தால், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் சில்லறை விற்பனை கடைகளில் வாங்க முடியாது. எனவே, சில மணிநேரம் டூல்ஸ் உள்ளிட்ட உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் ரீடெய்ல் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும். தொழில்துறையினர் வங்கிகளில் கடன் வாங்கும் பொழுது மிக அதிக MOD(Memorandum of Deposit) கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நோய்த்தொற்று முதல் அலை பரவலின் போது ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதே நடைமுறை தொடர வேண்டும்.
கோவையில் மத்திய ராணுவ மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(DRDO) உதவியுடன் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் உற்பத்தி செய்து அனுப்பப்படுகின்றன. இவற்றுக்கு மானியம் வழங்கினால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை எளிதில் சமாளிக்க முடியும். அதேசமயம், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான ஆக்சிஜன் தடையின்றி கிடைக்கும். எனவே, ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் பயன்பாடு அதிகரிக்க மானியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்றார்.