பொள்ளாச்சி: தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு இன்று தொடங்கியுள்ள நிலையில், கொரோனா வழிபாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடித்து, பொள்ளாச்சியின் கடைவீதிகளில் சாலையோர அத்தியாவசியக் கடைகள் திறக்கப்பட்டன.

கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் மே 24ஆம் தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. காலை 6 மணி முதல் மதியம் 12 வரை மட்டுமே அத்தியாவசியப் பொருட்களின் கடைகள் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, பொள்ளாச்சி நகர்ப்பகுதிகளில் பொதுமக்கள் முழு ஊரடங்கை கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்தநிலையில், அத்தியாவசிய பொருட்கள், மளிகை, பழங்கள், காய்கறி மற்றும் மருந்து கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால், வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து சாலையோர அத்தியாவசியப் பொருட்களின் கடைகள் திறக்கப்பட்டன.

மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளதால், கடை வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் நடமாட்டம் இல்லாததால் வியாபாரம் குறைந்து காணப்படுகிறது.