அரசு பஸ்களில் பெண்கள் கட்டனமில்லா பயணம்: திமுக மகளிர் அணி செயளாளர் மீனா ஜெயகுமார் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி!

கோவை: அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ள உதவிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறி, திமுகவின் மாநில மகளிர் தொண்டரணி துணைச்செயலாளர் மீனா ஜெயக்குமார் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.


கோவை: அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ள உதவிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறி, திமுகவின் மாநில மகளிர் தொண்டரணி துணைச்செயலாளர் மீனா ஜெயக்குமார் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் முதல் கையெழுத்திட்ட உத்தரவை அடுத்து, கோவை மாவட்டத்தில் 115 வழித்தடங்களில் 369 சாதாரண பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கூடுதலாக 70 பேருந்துகள் என மொத்தம் 447 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த 447 பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ள முடியும். இதைக் கொண்டாடும் வகையில், திமுக மாநில மகளிர் தொண்டரணி துணைச்செயலாளர் மீனா ஜெயக்குமார் பேருந்துகளில் பயணம் செய்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘முதல்வரின் அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பணிக்குச் செல்லும் பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த அறிவிப்பு பயனளிக்கும். தவிர பதவியேற்ற உடன் பால் விலை குறைப்பு, நிவாரணத் தொகை வழங்கல், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்துதல், தரமான சிகிச்சை, தடையில்லா ஆக்சிஜன் பெற நடவடிக்கை என அடுத்தடுத்து பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். இந்த நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.'' என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...