வால்பாறை: கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக இன்று முதல் அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ள நிலையில், வால்பாறையில் பொதுமக்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் காய்கறிகள், இறைச்சி, மீன்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வாங்க கடைகளில் குவிந்தனர்.

வால்பாறை புது மார்க்கெட் பகுதியில் வாரச்சந்தை ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுவது வழக்கம். கொரோனா கால கட்டம் என்பதால், சமூக இடைவெளியைப் பின்பற்றி பொதுமக்கள் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என்று அரசு அறிவித்து இருந்தது. இந்தநிலையில், நேற்று காலை வழக்கம் போல திரண்ட பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் கூட்டம் கூட்டமாக நின்று வீடுகளுக்குத் தேவையான காய் கறிகள், இறைச்சி, மீன்கள் உள்ளிட்டவற்றை வாங்கிச் சென்றனர். இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் இதுபோன்று பொதுமக்கள் கொஞ்சம் கூட கொரோனா அச்சம் இன்றி அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் சென்றது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.