சென்னை: தமிழ்ப் பண்பாட்டை துளிர்க்கச் செய்வது - பொருளாதார முன்னேற்றம் - மகளிர் நலன் - செம்மையான கட்டமைப்பு - தனிநபர் வருமான உயர்வு - ஒடுக்கப்பட்டோர் உரிமை - சமூக நீதி - மனிதவள மேம்பாடு - மாநில உரிமை ஆகியன நம் தனிப்பெரும் நோக்கங்கள்! எல்லோருக்கும் எல்லாம் என்பதே இலட்சியம்! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு தீட்டியுள்ள மடலில் குறிப்பிட்டுள்ளார்.

'எல்லோர்க்கும் எல்லாம் என்பதே இலட்சியம்..!' என்று
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரைந்திருக்கும் கடிதம்...
'தமிழகத்தின் முதல்வர் என்ற பொறுப்பை ஏற்றுக் கொண்டதற்குப் பிறகு எழுதும் முதல் மடல் இது.
உங்கள் அளவற்ற அன்பினால் - அதில் விளைந்த ஆதரவினால் - நம்பிக்கையினால் பதவி ஏற்றிருக்கிறேன்.
அன்னைத் தமிழகத்திற்கு அருந்தொண்டாற்றுகின்ற முதல் வரிசைப் பணியாளனாக என்னைக் கருதிக் கொள்கிறேனே தவிர, முதலமைச்சராகக் கருதவில்லை.
தமிழகத்தில் முன்னேற்றப் பணிகளை முடுக்கி விடும் தலையாய பொறுப்பை நாம் ஒன்றிணைந்து தலையில் ஏற்றிருக்கிறோம்.
தமிழகத்தைத் தரணியிலேயே தலைசிறந்த வாழ்விடமாக மாற்றிக்காட்ட வேண்டும் என்பதே எனது சூளுரை.
நேர்மையான, தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் நடக்கும் என்ற உத்தரவாதத்தை வழங்குகிறேன்.
தமிழ்ப் பண்பாட்டை துளிர்க்கச் செய்வது - பொருளாதார முன்னேற்றம் - சமூக மேம்பாடு - மகளிர் நலம் - பெண்களுக்கான அதிகாரங்கள் - ஒடுக்கப்பட்டோர் உரிமைகள் - சமூக நீதி மாநில உரிமை ஆகியன தனிப்பெரும் நோக்கங்கள்!
பெருந்தொற்றுக் காலத்தில் பொது மக்கள் அச்சம் தவிர்த்து, விழிப்புணர்வோடு ஒத்துழைப்பு வழங்கினால், நாம் விரைவில் வெளிவந்து, ஆக்கபூர்வமாக நற்பணிகள் ஆற்ற முடியும்.
இது பேதமும் பாகுபாடும் இல்லாத - எல்லாப் பிரிவினரையும் அரவணைப்புடன் அழைத்துச் செல்லும் - அனைத்து மக்களுக்கும் சொந்தமான தமிழக அரசு!
திமுகவைச் சார்ந்தவர்கள் மாற்றுக் கட்சித் தோழர்களோடும் நட்புணர்வுடன் மக்கள் பிரச்சினைகளை அணுகி, அவற்றுக்குத் தீர்வு காண முயல வேண்டும்.
சவால்களையும் நெருக்கடிகளையும் வலிமையுடன் எதிர்கொண்டு,
தமிழ் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கிடுவேன்! உறுதி!' என்று குறிப்பிட்டுள்ளார்.