கோவை: கோவை ஜனநாயக வாலிபர் சங்கம்-இந்திய மாணவர் சங்கம் சார்பாக கொரோனா விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
கோவை: கோவை ஜனநாயக வாலிபர் சங்கம்-இந்திய மாணவர் சங்கம் சார்பாக கொரோனா விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

ஜனநாயக வாலிபர் சங்கம்-இந்திய மாணவர் சங்கத்தின் கோவை பீளமேடு கிளைகள் சார்பாக கடந்த 5ம் தேதியன்று பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் கொரோனா விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. பொதுமக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து பிரச்சாரம் நடைபெற்றது.
பீளமேடு எல்லைத் தோட்டம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் சிங்கை- பீளமேடு நகரக் குழு செயலாளர் மணிபாரதி தலைமையேற்றார். வாலிபர் சங்கத்தின் முன்னாள் தலைவர் தோழர் கே.பாண்டியன் நிகழ்வை தொடங்கி வைத்தார். வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கனகராஜ், இந்திய மாணவர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.