கோவை: தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்வதை கட்டாயமாக்கவேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை மாவட்ட கட்டுமானம் மற்றும் அமைய்புசாரா தொழிலாளர் சங்கங்கள் கோரிக்கைவிடுத்துள்ளன.

இது குறித்து கோவை மாவட்ட கட்டுமானம் மற்றும் அமைய்புசாரா தொழிலாளர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;
“தொழிலாளர்களின் பேராதரவுடன் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். நல வாரியங்கள் குறித்து கீழ்க்காணும் கோரிக்கைகளை சமர்ப்பிக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள்2 கோடி பேரில், 70லட்சத்திற்கும் மேற்பட்டோர் மட்டும் பதிவு செய்துள்ளதுடன், அவர்களில்25 லட்சம் பேர் மட்டும் பதிவை புதுப்பித்துள்னர்.
கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழில்களில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களும் கட்டாயமாக நல வாரியங்களில் பதிவு செய்தாக வேண்டும் என அறிவித்து பதிவை கட்டாய மாக்க வேண்டும். கொரோனா காலத்தை கணக்கில் கொண்டு வாரியத்தில் புதுப்பிக்காமல் இருந்தாலும் அவர்களின் உறுப்பினர் பதிவு 31.03.2022 -ம் தேதிவரை செல்லுபடியாகும் என்று சிறப்பு அரசாணை வெளியிட வேண்டும்.
தற்போது இணைய வழியில் விண்ணப்பித்தவர்களின் மனுக்கள் 60 நாளில் தள்ளுபடி செய்யப்படுகிறது. இணைய வழியில் கொடுத்த மனுக்களை தள்ளுபடி செய்வதை கைவிட வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்து 60 வயது நிறைவடைந்த தொழிலாளி ஓய்வூதியம் பெற தகுதியானவர் என்று நிபந்தனைகளை ரத்து செய்து 2011ம் ஆண்டில் வெளியிட்ட அரசாணை நடைமுறைப்படுத்தவில்லை. 28.02.2011-ம் தேதிவரை நிபந்தனைகள் காரணமாக ஓய்வூதியம் மறுக்கபபட்டவர்களில் தற்போது உயிருடன் இருக்கும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும்.
கொரோனா காலத்தை முன்னிட்டு நல வாரிய பதிவு/புதுப்பித்தல் பணிகள் 10.06.2020ம் தேதி முதல் கணினி வழியில் நடைபெறுகிறது. இதற்கு ஆதார் அவசியமாக்கப்பட்டுள்ளது. ஆதார். குடும்ப அட்டைகளில் மொபைல் போன் இணைக்கப்படாத நிலையில் இணைய வழி பதிவு, புதுப்பித்தல் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆதார் போன் எண் சரிபார்த்தல் என்பதற்கு பதிலாக பயோமெட்ரிக் கைரேகை பதிவு முறை எளிமையாக இருக்கும் எனவே, பயோமெட்ரிக் பதிவு முறையை அமல்படுத்த வேண்டும்.” இவ்வாறு கோவை மாவட்ட கட்டுமானம் மற்றும் அமைய்புசாரா தொழிலாளர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு கூறியுள்ளது.