கோவை: கிணத்துக்கடவில் திமுக நிர்வாகிகள் குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி திமுகவினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு திமுக மேற்கு ஒன்றிய செயலாளராக முகமது யாசின், திமுக இளைஞர் அணி நிர்வாகியாக பாலசந்திரன் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் உரிமையாளர்களிடம் திமுக நிர்வாகிகள் பணம் கேட்டுமிரட்டி வருவதாக செய்தித்தாளில் செய்தி வெளியானது போல சிலர் முகநூலில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த திமுகவினர் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் திமுக நிர்வாகிகளை களங்கப்படுத்தும் வகையில் முகநூலில் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர்நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.