தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு..!

தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு..!


சென்னை: தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பதவியேற்றார். காலை 9 மணிக்குசென்னை ஆளுநர் மாளிகையில் முக ஸ்டாலின் மற்றும் அவாது அமைச்சரவையில் இடம்பெறும் 34 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். கொரோனா பரவலால், பதவியேற்பு விழா எளிமையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

பதவியேற்பு விழா லைவ் செய்யப்படும் என்பதால், தொண்டர்களும், பொதுமக்களும் வீட்டில் இருந்தபடியே நிகழ்ச்சியை காணலாம் என்று ஸ்டாலின் முன்னதாக அவரது தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் கோரிக்கை விடுத்திருந்தார். 

ஆளுநரை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற முக ஸ்டாலின், அவரது அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களை ஒவ்வொருவராக ஆளுநரிடம் அறிமுகம் செய்து வைத்தார். அங்கு கூடிருந்த அனாவரும், முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தமிழ்த்தாய் வாழ்த்து முழக்க, முத்துவேல் கருணாநிதி எனும் நான் என்று முக ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்ட சம்பவம் அவர் குடும்பத்தார் மற்றும் அங்கு கூடியிருந்த கட்சியினர் மத்தியில் பெறும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 



பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர், ஸ்டாலினுக்கு ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதேபோல், அனைத்து அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 



பதவி ஏற்ற பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நினைவிடம் சென்று அங்கு மலர் தூவி மரியாதை செய்து, ஆசீர்வாதம் பெற்று பின்னர் பெரியார் திடல், பேராசிரியர் இல்லம், அதன்பிறகு கோபாலபுரம் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், மாலை நான்கு முதல் 7 மணி வரை தலைமைச் செயலகம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு தனது ஆட்சியின் முதல் அமைச்சரவை கூட்டத்தை நடத்துகிறார். அதை முடித்த பிறகு, மாவட்ட ஆட்சியர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். இதில், நிர்வாகம் குறித்தும், கொரோனா போர்க்கால பணிகள் குறித்தும் அவர் பல முக்கிய ஆலோசனைகள் செய்யவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றிப் பெற்று, தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை சட்டமன்றக் குழுத் தலைவராக அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, எம்.எல்.ஏக்களின் ஆதரவுக் கடிதத்துடன், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஸ்டாலின் ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதன்படி, இன்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...