கோவை: கோவையில் ஆடி சொகுசு காரில் வந்து நூதன முறையில் ஆடுகளைத் திருடுவதை வழக்கமாகக் கொண்ட வாலிபர்களை கையும் களவுமாகப் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்த பொதுமக்கள்.

கோவை சுந்தராபுரத்தை அடுத்த மாச்சம் பாளையத்தைச் சேர்ந்தவர் அமிர்தம் வயது 50, இவர் தனது ஆட்டுக் கொட்டகையில் எட்டு ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார். நேற்று வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு கொட்டகையில் அடைத்து வைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து ஆடுகள் சத்தம் போடுவதைக் கேட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது இரண்டு வாலிபர்கள் ஆடி சொகுசு காரில் ஆடுகளைத் திருடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, அமிர்தம் சத்தம் போட்டார். அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அந்த வாலிபர்களைக் பிடிக்க முயற்சி செய்தனர்.
அதில் ஒரு வாலிபரை மட்டும் கையும் களவுமாக மடக்கிப்பிடித்து குனியமுத்துர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தடாகம் ரோடு டி.வி.எஸ் நகரைச் சேர்ந்த தீபக் வயது 24 என்பதும் தப்பி ஓடியது அவரது நண்பர் ஈஸ்வரன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அந்த வாலிபரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.