கோவையில் இருந்து 6 விமானங்கள் மட்டுமே இயக்கம்!

கோவை: தொடரும் கொரோனா தாக்கம் காரணமாக கோவையில் இருந்து தினமும் 6 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.


கோவை: தொடரும் கொரோனா தாக்கம் காரணமாக கோவையில் இருந்து தினமும் 6 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

கோவை சர்வதேச விமான நிலையம் கோவை உள்ளிட்ட சுற்றுப்புறங்களை சேர்ந்த 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. கொரோனா நோய் தொற்று பரவலுக்கு முன் தினமும் முப்பதுக்கும் மேற்பட்ட விமானங்கள் கோவையில் இருந்து இயக்கப்பட்டன.

கொரோனா பரவல் முதல் அலை காரணமாக கடந்த ஆண்டு மே மாதம் தினமும் ஐந்து விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. தற்பொழுது கொரோனா நோய்த்தொற்று பரவல் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. தற்போது தினமும் 6 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதுகுறித்து விமான நிலையவட்டாரங்கள் கூறுகையில், "கோவை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் மட்டுமே தினமும் அதிக சேவைகளை வழங்கி வருகிறது.

இன்றைய சூழலில் சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் வழங்கப்படுகின்றன. ஒரு சில நாட்கள் 'ஏர் இந்தியா' சேவை வழங்குகிறது. மற்றபடி பிரதானமாக 'இண்டிகோ' நிறுவனம் மட்டுமே அதிக சேவைகளை வழங்கி வருகிறது.

ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த ஸ்பைஸ் ஜெட் மற்றும் கோஏர் நிறுவனங்கள் தற்காலிகமாக சேவைகளை நிறுத்தி வைத்துள்ளன. வெளிநாட்டு விமான சேவை பிரிவில் ஏர் அரேபியா மட்டும் கோவை - ஷார்ஜா இடையே இயக்கப்படுகிறது. அதுவும் வாரத்தில் ஐந்து நாட்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த ஐந்து நாட்களும் இயக்கப்படுவதில்லை. ஒரு சில நாட்கள் விமான சேவை ரத்து செய்யப்படுகிறது," என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...