தமிழக அமைச்சர்கள் 34 பேரின் பட்டியல்

கோவை: மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 34 பேரில் ஒருவர் கூட கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் இடம்பெறவில்லை.



கோவை: மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 34 பேரில் ஒருவர் கூட கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் இடம்பெறவில்லை.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. நாளை கவர்னர் மாளிகையில் எளிமையான முறையில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

நாளை பதவியேற்கும் அமைச்சர்கள் விவரம் வருமாறு:-

தமிழக முதலமைச்சராக மு. க. ஸ்டாலின், துரைமுருகன் (நீர்வளத்துறை), கே. என். நேரு (நகர்ப்புற வளர்ச்சித் துறை), இ.பெரியசாமி (கூட்டுறவுத்துறை), பொன்முடி (உயர்கல்வித்துறை), எம். ஆர். கே. பன்னீர்செல்வம் (வேளாண்துறை), கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் (வருவாய்த்துறை) ஆகியோர் பதவியேற்கின்றனர்.

தங்கம் தென்னரசு (தொழில்துறை), ஏ.வ. வேலு (பொதுப்பணித்துறை), எஸ். ரகுபதி (சட்டத்துறை), முத்துசாமி (வீட்டுவசதித் துறை), கே. ஆர். பெரியகருப்பன் (ஊரக வளர்ச்சித்துறை) ஆகியோர் அமைச்சர்களாகப் பதவி ஏற்கின்றனர்.

தமோ அன்பரசன் (ஊரக தொழில்துறை), சாமிநாதன் (செய்தித்துறை), கீதாஜீவன் (சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை), அனிதா ராதாகிருஷ்ணன் (மீன்வளம்), ஆர்.எஸ் ராஜகண்ணப்பன் (போக்குவரத்துத்துறை) ஆகியோர் திமுக அமைச்சரவையில் பொறுப்பேற்கின்றனர்.

ராமச்சந்திரன் (வனத்துறை), சக்கரபாணி (உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை), செந்தில் பாலாஜி (மின்சாரம் துறை), ஆர். காந்தி (கைத்தறி துறை), மா. சுப்பிரமணியன் (மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை), மூர்த்தி (வணிக வரித்துறை) ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்கின்றனர்.

எஸ். எஸ். சிவசங்கர் (பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை), சேகர்பாபு (இந்து சமய அறநிலையத்துறை), பழனிவேல் தியாகராஜன் (நிதி மற்றும் மனித வளம்), நாசர் (பால்வளத்துறை), செஞ்சி கே. எஸ். மஸ்தான் (சிறுபான்மை துறை) ஆகியோர் அமைச்சர்கள் ஆகின்றனர்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி (பள்ளி கல்வித்துறை), மெய்யநாதன் (சுற்றுச்சூழல் துறை), வி. சி. கணேசன் (தொழிலாளர் நலன்), மனோ தங்கராஜ் (தகவல் தொழில்நுட்பத்துறை), மதி வேந்தன் (சுற்றுலாத்துறை), கயல்விழி செல்வராஜ் (ஆதிதிராவிடர் நலத்துறை) என மொத்தம் 34 அமைச்சர்கள் நாளை பதவியேற்கின்றனர்.

இதில் கோவை மாவட்டத்தில் திமுக சார்பில் யாரும் வெற்றி பெறாததால் இந்த முறை கோவை மாவட்ட அமைச்சர்கள் யாரும் அமைச்சரவையில் இடம் பெறவில்லை. விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகிய இரண்டு அமைச்சர்கள் பதவி ஏற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...