கோவையில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்பு வீரரே கொரோனாவுக்கு பலி!

கோவை: கோவையில் கொரோனா தொற்று காலத்தில் முன் களப் பணியாளர்களுக்கு இணையாக தடுப்புப் பணியிலும், விழிப்புணர்விலும் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் குணசேகரன் கொரோனா தொற்றுக்கு பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவையில் கொரோனா தொற்று காலத்தில் முன் களப் பணியாளர்களுக்கு இணையாக தடுப்புப் பணியிலும், விழிப்புணர்விலும் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் குணசேகரன் கொரோனா தொற்றுக்கு பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் தமிழ்நாடு அரசு தீயணைப்பு மற்றும் மீட்பு பணியில் 15/02/1991ம் ஆண்டு முதல், பணியாற்றி வந்தார். கடந்த ஒரு ஆண்டாக தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையத்தில், எஸ்எப்ஓ ஆக பணியாற்றி வந்தார். பணியில் மிகுந்த பக்தியும், மரியாதையும் கொண்ட இவர், பணியில் இருக்கும் பொழுது எந்த நேரத்தில் எந்த பகுதியில் இருந்து அழைப்பு வந்தாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை முடுக்கி விடுவதில் ஒரு முன் களப்பணியாளராக, திகழ்ந்தார்.

மேலும் கொரோனா தொற்று முதல் அலையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தொண்டாமுத்தூர் தீயணைப்பு நிலையத்தின் சார்பாக, மேற்கொண்டவர் குணசேகரன். மாநகராட்சி முன் களப்பணியாளர்களான துப்புரவு பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய, கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை கூட, தாமாக முன்வந்து அனைத்து தெருக்களிலும், தெளித்தவர்.

கொரோனா தொற்று முதல் அலையை கட்டுக்குள் கொண்டுவர தொண்டாமுத்தூர் பகுதியில் பேருதவியாக திகழ்ந்தவர் குணசேகரன். கடந்த ஆண்டு கொரோனா குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, மாநகராட்சியின் வழிகாட்டு, நெறிமுறைகளை கடைப்பிடித்து, பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, முகக் கவசங்கள் அணிந்து கொரோனா தொற்றை எதிர்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, முழுமனதுடன் பொதுமக்களுக்கு அறிவுரை கூறியவர் குணசேகரன். பணியில் மிகுந்த அக்கறையும் ஈடுபாடும் கொண்ட குணசேகரன் இன்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த சம்பவம், தீயணைப்பு துறை, ஊழியர்கள் மத்தியில் மட்டுமின்றி, தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி சென்றுள்ளது. குணசேகரனுக்கு புனிதா என்ற மனைவியும், ஒரு மகன், மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...