பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் இன்று ஒரே நாளில், 186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலைப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் இன்று ஒரே நாளில் சுமார் 186 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலைப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் இன்று ஒரே நாளில் சுமார் 186 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொள்ளாச்சி நகராட்சியைப் பொறுத்தவரையில் நாளொன்றுக்கு 40 முதல் 50 பேருக்கு தொற்று இதுவரையில் உறுதி செய்யப்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு இன்று பொள்ளாச்சி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி நகர் பகுதியில் 46 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 32 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 73 பேருக்கும் என பொள்ளாச்சியில் இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 151 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதியாகியுள்ளது. தொற்று ஏற்பட்ட இடங்களில் சுகாதாரத் துறையினர் தீவிர கட்டுப்பாடுகளை விதித்து கண்காணித்து வருகின்றனர். தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று முதல் பகுதி நேர ஊரடங்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சியில் இதுவரை இல்லாத அளவுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளதால் பொள்ளாச்சி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள சுய விழிப்புணர்வுடன் இருக்குமாறு சுகாதாரத் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...