கோவை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றியை எதிர்த்து ஹிந்துஸ்தான் ஜனநாயக கட்சி வேட்பாளர் அளித்தமனுவை தேர்தல் ஆணையத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றியை எதிர்த்து ஹிந்துஸ்தான் ஜனநாயக கட்சி வேட்பாளர் அளித்தமனுவை தேர்தல் ஆணையத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த மே 2-ஆம் தேதி எண்ணப்பட்டது. கோவை தெற்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது பாஜக சார்பில் போட்டியிட்ட வானதி சீனிவாசன் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கும் இடையே குறைந்த வாக்குகள் வித்தியாசம் நிலவியது.
இரவு 7 மணி அளவில் இறுதி சுற்று நிலவரப்படி கமல்ஹாசனை விட வானதி சீனிவாசன் 1,728 வாக்குகள் கூடுதலாகபெற்று வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஹிந்துஸ்தான் ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி தெற்கு தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இந்த நிலையில் அவர் இன்று தமிழக தேர்தல் ஆணையத்தின் குறை தீர்ப்பு எண்ணில் அவர் பாஜகவின் வேட்பாளர் வெற்றியில் சந்தேகம் இருப்பதாக மனுவை தாக்கல் செய்தார்.

அந்த மனுவை பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவருக்கு பதில் அளித்துள்ளது. இந்த சம்பவம் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.