உடுமலை: உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து பிஏபி மூன்றாம் மண்டல பாசன இறுதி சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையின் மூலம் பிஏபி பாசனத் திட்டத்தின் மூலம் திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு பாசன வசதி பெறுகின்றன.

உடுமலை நகரம், உடுமலை மற்றும் குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களின் குடிநீர் திட்ட ஆதாரமாகவும் இது உள்ளது. பிஏபி மூன்றாம் மண்டல பாசனத்திலுள்ள, 94,362 ஏக்கர் நிலங்களுக்கு, ஜனவரி 11ம் தேதி முதல் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
ஐந்து சுற்றுக்களில், 9,500 மில்லியன் கன அடி நீர் வழங்கப்பட உள்ளது. நான்கு சுற்றுகளில் நீர் வழங்கப்பட்டு, கடந்த மாதம் 26ம் தேதி, தண்ணீர் நிறுத்தப்பட்டது. திட்ட தொகுப்பு அணைகளில் இருந்து, காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு சேகரிக்கப்பட்டு வந்தது.

அணையின் நீர்மட்டம் உயர்ந்த நிலையில், மூன்றாம் மண்டல பாசன நிலங்களுக்கு இறுதி சுற்று தண்ணீர் இன்று முதல் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், “இறுதி சுற்றுக்கு 21 நாட்கள் தண்ணீர் வழங்கப்பட்டு பாசன காலம் நிறைவு செய்யப்படும்,” என்று தெரிவித்தனர். திருமூர்த்தி அணையில் தற்போது, மொத்தமுள்ள 60 அடியில் 48.98 அடியாகவும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 820 கன அடியாகவும் உள்ளது.