மேற்கு வங்கத்தில் பாஜகவினர் மீது தாக்குதல்... பொள்ளாச்சியில் பாஜகவினர் ஆர்பாட்டம்..!

பொள்ளாச்சி: மேற்கு வங்கத்தில் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொள்ளாச்சியில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்பாட்டம்.


பொள்ளாச்சி: மேற்கு வங்கத்தில் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொள்ளாச்சியில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்பாட்டம்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மேற்கு வங்காள மாநிலத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரு தரப்பினரும் இடையே ஏற்பட்ட மோதலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.



இதை கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகர பாஜக சார்பில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர தலைவர் மணிகண்ட குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாவட்ட தலைவர் வசந்த ராஜன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது மேற்கு வங்கத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைக் கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...