பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயத்தை பொள்ளாச்சி மதுவிலக்கு போலீஸார் அழித்தனர். அத்துடன், சிறப்பு ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மதுவிலக்கு போலீஸார் தெரிவித்தனர்.

கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட எரிசாராயம், கள்ளச்சாராயம், போலி மது தயாரிப்பு போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்க துறை போலீஸார் பல்வேறு ரோந்து பணிகளை நடத்தி வருகின்றனர். இதில் கடந்த 2019 ஆம் ஆண்டு பேரூர் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிசாராயங்களை மதுவிலக்கு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்தநிலையில், அரசு உத்தரவின்படி பல்வேறு பகுதிகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 9798.600 லிட்டர் எரிசாராயங்களை, இன்று மாவட்ட கலால் துறை அதிகாரி சிவகுமார், பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2 தலைமை எழுத்தர் கௌரி, மற்றும் வருவாய்த் துறை ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில், தீயணைப்புத்துறை அதிகாரிகள் பாதுகாப்போடும், பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையம் கிராமத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத ஓடை புறம்போக்கு பகுதிக்கு கொண்டு சென்று மதுவை போலீஸ்ர் தீ வைத்து அழித்தனர்.

ஊரடங்கு காலங்களில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவது, மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக சிறப்பு ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், மதுவிலக்கு போலீஸார் தெரிவித்தனர்.