கோவையில் குழந்தைகளுக்கான பிரத்தியேக கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே ஐந்து குழந்தைகள் அனுமதிப்பட்டனர்

கோவை: கொரோனா இரண்டாம் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கோவையில் குழந்தைகளுக்கான பிரத்தியேக கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டது. முதல் நாளிலேயே, கொரோனா சிகிச்சைக்காக ஐந்து குழந்தைகள் அனுமதிப்பட்டனர்.



கோவை: கொரோனா இரண்டாம் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கோவையில் குழந்தைகளுக்கான பிரத்தியேக கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டது. முதல் நாளிலேயே, கொரோனா சிகிச்சைக்காக ஐந்து குழந்தைகள் அனுமதிப்பட்டனர்.

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கோவை மாவட்டத்தின் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 82 ஆயிரத்தை கடந்தது. மேலும் சென்னை, செங்கல்பட்டு மாவட்டத்தைத் தொடர்ந்து கோவையிலும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,000 தாண்டி உள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 1,566 பேருக்கு உறுதியானதால், புதிய உச்சத்தை பெற்றது.

இந்தநிலையில் கொரோனா இரண்டாம் பரவலில் தற்போது இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு ஏற்படும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க பிரத்தியேக மையம் அமைக்கப்பட்டுள்ளது.



அதைத் தொடர்ந்து பந்தைய சாலையில் உள்ள மாசாளிக் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் நேற்று திறக்கப்பட்டது. முதல் நாளிலேயே கொரோனா பாதிப்பு உறுதியான ஐந்து குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை மையத்தில் முதல் கட்டமாக 25 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து படுக்கைகளுக்கும் தனியாக ஆக்ஸிஜன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.



கொரோனா தொற்று உறுதியான குழந்தைகளுடன் இருக்க, தாயாருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் தாயாருக்கு லேசான தொற்று பரவல் இருந்தால் அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தைகள், கொரோனா சிகிச்சை மையத்தில் 24 மணி நேரம் மருத்துவ கண்காணிப்பின் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...