கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 529 பேரில், 420 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் பண்ணப்பட்டதாக சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், சுகாதாரத்துறை சார்பில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், நேற்று கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 30 பேருக்கும், இன்று ஒரே நாளில் 12 பேருக்கும் என 42 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 529 பேரில் 420 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்த டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 109 பேர் பொள்ளாச்சி மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்
கிணத்துக்கடவு பகுதியில் இதுவரை 4192 பேர் கொரோனா தடுப்பூசி போடபட்டுள்ளதாக சுகாதாரத்துறை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.