மு.க.ஸ்டாலினுக்கு கோவை பேரூர் பேராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் வாழ்த்து!

கோவை: முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை பேரூர் பேராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


கோவை: முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கோவை பேரூர் பேராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;

“எல்லாம்வல்ல சுயிலைநாதர்‌ கருணையினாலும்‌ அருள்மிகு அம்பலவாணப்பெருமான்‌ இன்னருளாலும்‌ அருள்திரு சாந்தலிங்கப்பெருமான்‌. தண்ணருளாலும்‌ இருபத்துநான்காம்‌ குருமகாசந்நிதானங்கள்‌ கயிலைக்குருமணி அவர்களின்‌ குருவருளாலும்‌ தமிழகத்தின்‌ புதிய முதலமைச்சராகப்‌ பொறுப்பேற்க உள்ள உங்களுக்கு உளங்களிந்த வாழ்த்துகளைத்‌ தெரிவித்துக்கொள்கின்றோம்‌.

தாங்கள்‌ துணை முதல்வராக இருந்தபோது தவத்திரு குன்றக்குடி அடிகளாரும்‌ நாமும்‌. வந்து உங்களை வாழ்த்திய போது இருவரும்‌, ‘விரைவில்‌ நீங்கள்‌ முதல்வர்‌ பதவிக்கு. வர வேண்டும்‌’ என்று சொன்னோம். அந்த அடிப்படையில்‌ திருவருள்‌ தற்போது தங்களை முதல்வர்‌ பதவியிலே அமர்த்தி இருப்பது மிகவும்‌ மகிழ்ச்சிக்குரியது.

எல்லாரோடும்‌ இனிமையாகப்‌ பழகுகின்ற பண்பு, எளிமை, உள்ளத்திலே ஊக்கமும்‌ உறுதியும்‌ ஆகிய நற்பண்புகளைக்‌ கொண்டிருக்கும்‌ தாங்கள்‌. தற்போது தமிழகம்‌ எதிர்கொண்டுள்ள இந்தத்‌ கொரோனா தொற்று சூழலைச்‌ செம்மையான முறையில்‌ கையாண்டு, தொற்றை முற்றிலும்‌ நீக்கித்‌ தொடர்ந்து தமிழகத்தை ஒரு நல்லாட்சி மிக்க மாநிலமாசு உருவாக்க எல்லாம்‌ வல்ல இறையருளை வேண்டிக்கொள்கின்றோம்‌.” இவ்வாறு சாந்தலிங்க மருதாசல அடிகள்தெரிவித்துள்ளார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...