நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கேரளா எல்லைப் பகுதியான கிண்ணக்கொரை பகுதியில் மாவோயிஸ்ட் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுவரும் அதிரடிப்படையினரின் வாகனம் தாய்சோலை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது நிலைதடுமாறி தலைகுப்புற விழுந்ததில் ஏழு காவலர்கள் காயங்களுடன் தப்பினர்.

நீலகிரி மாவட்டத்தின் எல்லைப் பகுதியான கிண்ணக்கொரை பகுதியில் பணிபுரிந்து வரும் 10 அதிரடிப் படை வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்காக உதகை அரசு மருத்துவமனைக்கு வேன் மூலம் வந்தனர். வேனினை ஜெயக்குமார் என்ற காவலர் ஓட்டினார்.

வேன் தாய்சோலைப் பகுதியில் திரும்பிய போது நிலைத்தடுமாறி, சாலையின் குறுக்கே விழுந்தது.

இதில் அருளப்பன, சரவணன, மகேந்திரன, நித்தியானந்தன், அன்பரசன், கதிரவன், ரத்தினவேல் ஆகிய 7 பேருக்கு தலை, கை கால்களில் காயம் ஏற்பட்டது. சந்தோஷ், மன்சூர், ஓட்டுநர் ஜெயக்குமார் ஆகியோர் காயமின்றி தப்பினர். இவர்களுக்கு தாய்சோலைப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்பு மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்கள். ஏழு காவலர்கள் மேல் சிகிச்சைக்காக உதகை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.