கோவை: கோவையில் தொடர்ந்து ஆன்லைன் வகுப்பில் படித்து வந்த கல்லூரி மாணவி, கல்லூரியில் சென்று சக மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி படிக்க முடியாத சூழ்நிலையால் தனிமையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவையில் கல்லூரி மாணவி விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதையடுத்து காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில், இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை சிங்காநல்லூர் சவுரிபாளையம் பகுதியில் உள்ள ஜி.வி. ரெசிடென்சியில் வசிப்பவர் ராஜன். இவரது மகள் சினேஹா. கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படிக்கின்றார். இவர் கொரோனா ஊரடங்கினால், கல்லூரி மூடப்பட்டதை அடுத்து கல்லூரிக்கு செல்லவில்லை. ஆன் லைன் வகுப்பிலேயே படித்து வந்திருக்கின்றார். ஆனால், கல்லூரிக்கு நேராக சென்று வகுப்பை கவனிக்க முடியாமல் போனதால், மன சோர்வுடனே சினேஹா இருந்து வந்திருக்கிறார்.
நேற்று இரவு தன் அறைக்கு சென்ற சினேஹா தன்னால் கல்லூரிக்கு சென்று கற்க முடியவில்லையென வருத்தமடைந்திருக்கிறார். அந்த வேதனையால், உடனே அங்கிருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தால் சினேஹா குடும்பத்தார் சோகத்தில் மூழ்கினர். கல்லூரி மாணவி தற்கொலை குறித்து சிங்காநல்லூர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.