வால்பாறை: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு வருவோர் சாலை ஓரங்களில் மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை மற்றும் காவல்துறையினர் எச்சரிக்கை செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. மேலும், ஆனைமலை புலிகள் காப்பகமாக செயல்பட்டு வருகிறது. இதனைக்காண, ஏராளமான சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வந்து செல்கின்றனர். இங்கு சுற்றுலாவுக்கு வருபவர்கள் இயற்கையை ரசிப்பதோடு, ஆற்றின் கரையோரம் சாலையோரங்களில் அமர்ந்து மது அருந்துவதாகவும் இதனால் சாலையில் செல்லும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் காவல்துறைக்கும் வனத்துறைக்கும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதனைத்தொடர்ந்து, காவல்துறையும் வனத்துறையும் ஆற்றோரப் பகுதிகள், சாலையோரங்கள் மற்றும் பொது இடங்களில் மது அருந்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே, வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் குடிமகன்களும் பொது இடங்களில் மது அருந்தி, பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.