யானைகள் வழித்தடத்தில் இல்லாத செங்கல் சூளைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் - எம்.பி பி.ஆர்.நடராஜன்

கோவை: கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன், கோவை திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர்கள், மாவட்ட ஆட்சியர் நாகராஜனை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.



கோவை: கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன், கோவை திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர்கள், மாவட்ட ஆட்சியர் நாகராஜனை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

பின்னர் எம்.பி பி.ஆர் நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவையில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாதவாறு முன்னரே போதுமான அளவு ஆக்சிஜனை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டது. மேலும், மாவட்ட கண்காணிப்பு அலுவலரான முருகானந்தம், சுகாதாரத்துறை செயலாளர் போன்றவர்களிடம் ஏற்கனவே இது தொடர்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது என தகவல்கள் வருகிறது. இதனை தவிர்க்கும் அளவுக்கு ஆக்சிஜன்களை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும், கோவை தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளை விவகாரத்தில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும். 30 நாட்கள் அவகாசத்தில் யானைகள் வழித்தடம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அவ்வழியாக உள்ள செங்கல் சூளைகள் இயங்க அனுமதிக்காமல், பிற செங்கல் சூளைகள் நீதிமன்றத்தின் வழிக்காட்டுதல் படி இயங்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு நடராஜன் கூறினார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...