கோவையில் தடையை மீறி தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு!

கோவை: கோவையில் தடையை மீறி தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் தடையை மீறி தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டோர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை, கடந்த 2ம் தேதி நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாகதேர்தலில் வெற்றி பெறுவோர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.

மேலும், கடந்த 2-ம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.தேர்தல் ஆணையத்தின் தடை மற்றும் முழு ஊரடங்கு தடையை மீறி கோவையில் சிலர் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

கோவை வின்சென்ட் ரோடு, டவுன்ஹால் மணிக்கூண்டு, மேட்டூர், மாகாளியம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களில் ஒன்று சேர்ந்து, சிலர் கூட்டமாக தேர்தல் வெற்றியை கொண்டாடினர்.

தடையை மீறி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டோர் மீது உக்கடம் மற்றும் போத்தனூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...