கோவையில் கொரோனாவால் தெரு மூடல்.. வேலைக்கு செல்ல முடியாததால் மக்கள் ஆர்ப்பாட்டம்..!

கோவை: கோவையில் கொரோனா தடுப்பு காரணமாக சம்பந்தப்பட்ட தெருவை மூடியதால், வேலைக்கு செல்ல முடியாத மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவையில் கொரோனா தடுப்பு காரணமாக சம்பந்தப்பட்ட தெருவை மூடியதால், வேலைக்கு செல்ல முடியாத மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று கோவை குப்புசாமி மருத்துவமனை அருகில் உள்ள பெருமாள் கோயில் வீதி பகுதியில் ஒரு வீட்டில் உள்ள நபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பாக அந்த வீட்டுக்கு செல்லக் கூடிய பகுதியில் தகரம் வைத்து தடுப்பு அமைக்கப்பட்டது. அந்த வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் குடியிருந்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் அவர்கள் இன்று காலையில் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காகப் புறப்பட்டனர். தடுப்பின் காரணமாக இரு சக்கர வாகனத்தில் மூலமாகவும் நடந்து செல்லவும் முடியாத சூழ்நிலையால் வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. அதனால் அவர்கள் இந்தப் பகுதியில் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஒரு வீட்டில் ஒரு தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்காக அந்தப் பகுதியில் உள்ள 50 குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர். ஆதலால், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நாங்கள் அந்தப் பகுதியில் பயணிக்கவும் வேலைகளுக்கு செல்லவும் எங்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து 50-க்கும் மேற்பட்ட குடியிருப்பைச் சேர்ந்த அந்தப் பகுதி மக்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...