கோவை: கோவை மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
கோவை: கோவை: கோவை மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனாதொற்று தொற்று உறுதி செய்யப்பட்டதால் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்கு, தினமும், 500 -க்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள், ஓய்வூதியதாரர்கள், முன்பணம் மற்றும் பெயர் மாற்றம் உள்ளிட்ட, பல்வேறு தேவைகளுக்காக வருகின்றனர்.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், கடந்த மாதம் 30-ம் தேதி முதல் சந்தாதாரர்கள் அலுவலகத்துக்கு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், கோவை வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலக ஊழியர்கள், 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து, மக்கள் தொடர் அதிகாரி கூறுகையில், ‘'முதலில் அலுவலக ஊழியர்கள் ஒன்பது பேருக்கு, தொற்று ஏற்பட்டது. இப்போது மேலும் ஏழு ஊழியர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனால் தற்காலிகமாக அலுவலகம் மூடப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை, சந்தாதாரர்கள் அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டாம்.
அனைத்து தேவைகளுக்கும் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்' என்றார்.
அலுவலகம் மூடப்பட்டு இருப்பது தெரியாமல், சந்தாதாரர்கள் பலர் அலுவலகத்துக்கு வந்து காத்திருந்தனர். இது குறித்து அங்குள்ள ஊழியர்கள் விளக்கிக் கூறியும், சந்தாதாரர்கள் கலைந்து செல்லாமல் அங்கேயே காத்திருந்தனர்.