கோவை: தமிழகத்தில் நடந்து முடிந்து சட்டமன்ற பொதுத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்ட மொத்தம் 137 வேட்பாளர்களில் 115 வேட்பாளர்கள் தங்களது டெபாசிட் தொகையை இழந்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் தேர்தல் அதிகாரியாக மாவட்ட கலெக்டர் நாகராஜன் நியமிக்கப்பட்டார். கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 15 லட்சத்து 9 ஆயிரத்து 531 ஆண்கள், 15 லட்சத்து 52 ஆயிரத்து 799 பெண்கள், 414 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் 65 சுயேச்சை வேட்பாளர்களுடன் சேர்த்து 137 வேட்பாளர்கள் இறுதி வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். கோவை மாவட்டத்தில் 68.32 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின. மாவட்டத்தில் 21,05,673 வாக்காளர்கள் வாக்களித்தனர். 31.68 சதவிகிதம் பேர். அதாவது, 9,76,355 பேர் வாக்களிக்க வரவில்லை. ஆண் வாக்காளர்கள் 15,19,027 பேர் உள்ளனர். இவர்களில் 10,49,917 பேர் வாக்களித்தனர். அதாவது 69.12 சதவிகிதம் பேர் வாக்களித்தனர். பெண் வாக்காளர்கள் 15,62,573 பேர் உள்ளனர். இவர்களில் 10,55,653 பேர் வாக்களித்தனர். அதாவது 67.65 சதவிகிதம் பேர் மட்டுமே வாக்களித்தனர். ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். ஆனால், ஆண்களைக் காட்டிலும் பெண்கள் சுமார் இரண்டு சதவிகிதம் குறைவாகவே வாக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று எண்ணப்பட்டன. இதில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் 10. தவிர 12 வேட்பாளர்கள் டெபாசிட் வாங்கியுள்ளனர். 115 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.