கோவை: என் அரசியல் பணிக்கு வித்திட்டு, தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கி ஊக்குவித்த தலைவர் நம்மவர் கமல்ஹாசன் அவர்களுக்கு, என் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவரான டாக்டர் ஆர்.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை: என் அரசியல் பணிக்கு வித்திட்டு, தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கி ஊக்குவித்த தலைவர் நம்மவர் கமல்ஹாசன் அவர்களுக்கு, என் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவரான டாக்டர் ஆர்.மகேந்திரன், தெரிவித்துள்ளார்.
‘‘மக்கள் நீதி மய்யம் கட்சி துவங்கப்பட்டு மூன்று ஆண்டுகளே ஆன நிலையில், எங்கள் கொள்கைகளின் மீதும், நேர்மையின் மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து நேர்மையாளர்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகள்! மிக நீண்ட வரலாறும், பலமும் கொண்ட கட்சிகளுக்கு நிகராக, கடுமையான போட்டியை தேர்தல் களத்தில் உருவாக்கியதே, எங்கள் மகத்தான வெற்றியாகக் கருதுகிறேன்! எங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு ஓட்டும் நேர்மையான ஓட்டு என்பதில் பெருமிதம் கொள்கிறேன்!
கோவை சிங்காநல்லூர் தொகுதியில் எனக்கு வாக்களித்த 36,855 வாக்காளர்களுக்கும், என் நன்றியை உரித்தாக்குகிறேன். எனக்கு தமிழகம் முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், நல்லாசியும், ஆதரவும், வாழ்த்துகளையும் வழங்கிய, அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!
கோவை சிங்காநல்லூர் தொகுதியில் அல்லும், பகலும் அயராது உழைத்த கட்ச நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் களப்பணி ஆற்றிய அனைத்து தன்னார்வலர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்! போட்டியிட்ட முதல் சட்ட மன்றத் தேர்தலிலேயே, தமிழகமெங்கும் மக்கள் நீதி மய்யம் வாக்குகளை பெறுவதற்கு, அயராமல் உழைத்த அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள். மேலும், என் அனைத்து நிலைகளிலும் எனக்கு உறுதுணையாக இருக்கும் என் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
கோவை சிங்காநல்லூர் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கும் ஜெயராம் அவர்கள் சிறப்பான மக்கள் சேவையாற்றிட என் வாழ்த்துக்கள். தேர்தலோடு முடிந்து விடுவதில்லை அரசியல்! மக்கள் நலனுக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே இருப்பேன் என்று நன்றியோடு தெரிவித்துக்கொள்கிறேன்!'' என்று மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் டாக்டர் ஆர்.மகேந்திரன் தெரிவித்துள்ளார்.