திரையரங்கு உரிமையாளர்களின் நலனைக் காக்க எட்டு சதவிகித வரியை ரத்து செய்ய வேண்டும்... திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை..!

திருப்பூர்: தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்க உள்ள திமுக அரசு திரையரங்கு உரிமையாளர்களின் நலனைக் காக்கும் வகையில் எட்டு சதவிகித வரியை ரத்து செய்ய வேண்டும் என திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் சக்தி சுப்பிரமணியம் கோரிக்கை வைத்துள்ளார்.


திருப்பூர்: தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்க உள்ள திமுக அரசு திரையரங்கு உரிமையாளர்களின் நலனைக் காக்கும் வகையில் எட்டு சதவிகித வரியை ரத்து செய்ய வேண்டும் என திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் சக்தி சுப்பிரமணியம் கோரிக்கை வைத்துள்ளார்.

திருப்பூர் யூனியன் மில் சாலையில் உள்ள தனியார் திரையரங்கில் செய்தியாளர்களை சந்தித்த திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் சக்தி சுப்பிரமணியம், ‘‘புதிதாக பொறுப்பேற்கவுள்ள திமுக அரசுக்கு, வாழ்த்து தெரிவித்ததோடு கலைஞர் ஆட்சி காலத்தின் போது திரை கலைஞர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செய்திருப்பதாகவும் அந்த வழியில் பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திரைக் கலைஞர்களின் வாழ்வு மேம்பட பல்வேறு திட்டங்களை செய்வார். விரைவில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் உட்பட திரை கலைஞர்கள் இணைந்து பாராட்டு விழா நடத்த இருப்பதாக உள்ளனர்.

கொரோனா காலகட்டத்தில் மிகவும் நலிவடைந்த திரையரங்கு உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க திரையரங்குகள் இயங்காது. ஊரடங்கு காலத்திற்கான சொத்துவரி, தொழில்வரி மற்றும் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழகத்தில் மட்டுமே வசூலிக்கப்பட்டு வரும் எட்டு சதவிகித உள்ளூர் வரியை ரத்து செய்ய வேண்டும். அதன் மூலம் டிக்கெட் கட்டணம் குறையும்'' என கோரிக்கை வைத்தார்.

மேலும், புதிதாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் திரைத்துறையில் இருப்பதாலும் விநியோகஸ்தர் என்பதாலும் எங்களின் கஷ்டம் அவருக்கு தெரியும் என்பதால், அவர் மூலமாகவும் எங்கள் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு: மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் போராட்டம்; கைது

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு இரண்டாவது முறையாகவும் அனுமதி மறுத்ததைக் கண்டித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத...

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...